சங்கம் இருந்ததா?

சங்கம் இருந்ததா?

//சங்க இலக்கியங்களில் சங்கம் என்ற சொல்லே கிடையாது.//

//சங்கம் என்ற சொல் வடமொழிச் சொல்லாகும்//

//சங்கம் என்ற சொல்லுக்கு நிகராகத் தமிழில் கூடல், அவை, மன்றம் ஆகிய சொற்கள் உள்ளன//

//கூடல், மன்றம் ஆகிய சொற்கள் கூட சங்க இலக்கியங்களில் காணப்படவில்லை//

//சிலப்பதிகாரத்தில், "பட்டி மண்டபத்து பாங்கு அறிந்து ஏறுமின்" என்ற தொடர் காணப்படுகிறது. 

இது புலவர்கள் கூடும் அவையாக இருக்கலாம்//

//புத்தர்களும் சமணர்களும் தத்தம் சமயங்களை வளர்க்க சங்கம் அமைத்தனர்//

//சிலப்பதிகாரம் புத்த இலக்கியம், மணிமேகலை சமண இலக்கியம்//

//சிலப்பதிகாரத்தில் இலங்கை மன்னன் கயவாகுவும் சேர மன்னன் செங்குட்டுவனும் சமகாலத்தவர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அரசர்களின் காலம் கிபி இரண்டாம் நூற்றாண்டு என்பது தெளிவு //

//நமக்குக் கிடைத்திருக்கும் மிகப் பழமையான இலக்கண நூல் தொல்காப்பியம். இதில் "என்ப, மொழிப, என்மனார் புலவர்" என்ற நூற்பா இறுதிச் சொற்கள், தொல்காப்பியத்திற்கு முன்பே இலக்கண நூல்கள் இருந்திருக்க வேண்டும் என்ற எண்ணத்தைத் தோற்றுவிக்கின்றன.

தொல்காப்பியத்தில் காணப்படும் மிகப் பழமையான சொற்கள் அதன் தொன்மைக்குச் சான்றாகும்.

தொல்காப்பிய மொழி நடை, சிலப்பதிகார மொழி நடைக்கு முந்தையதாக இருந்திருக்க வேண்டும்

சிலப்பதிகாரத்திற்கு முன்பே தொகை நூல்கள் (பத்துப்பாட்டு, எட்டுத்தொகை) தொகுக்கப்பட்டு இருக்க வேண்டும்

இந்த செயல்முறையானது புலவர்கள் ஒன்றாகக் கூடிய அவையில் (மன்றங்களில்) நிகழ்ந்திருக்க வேண்டும்

புலவர்கள் கூடியதாலேயே 'கூடல்' என்ற பெயர் மதுரைக்கு ஏற்பட்டிருக்க வேண்டும்.

இத்தகைய மன்றங்களுக்கு போர், இயற்கைப் பேரிடர் போன்றவற்றால் இடையூறு ஏற்பட்டிருக்க வேண்டும்.

அதனால் மன்றங்கள் தொடர்ச்சியாக இல்லாமல் இருந்திருக்கலாம்.  அன்றியும் சில காலம் மட்டும் நடைபெற்று வந்திருக்கலாம். 

முதற்சங்கம், இடைச்சங்கம், கடைச்சங்கம் என்று இருந்திருக்க, உறுதியான ஆதாரங்கள் கிடைக்கப் பெறவில்லை.  சங்கங்கள் பல ஆயிரம் ஆண்டுகள் நீடித்து வந்தன என்ற கருத்துக்கள் ஆதாரப்பூர்வமற்றவை.


தொகைநூல்கள் தொகுக்கப்பட்டுள்ள விதத்தை நோக்கும் போது, அவர்கள் திட்டமிட்டு ஒன்றாக கூடித் தமிழை வளர்த்தனர் என்று உணர முடிகிறது//

//அரிக்கமேட்டில் காணப்படும் ரோமாபுரி நாணயங்களும், தாலமி, பெரிப்ளூஸ், ஸ்டிராபோ, பிளினி போன்ற மேலைநாட்டு வரலாற்று அறிஞர்களின் குறிப்புகளும் சங்க கால வரலாற்றுக்குச் சான்றுகளாகத் திகழ்கின்றன//

//புலவர்கள் ஒன்றாகக் கூடித் தமிழ் வளர்த்த காரணத்தால் சங்கம் இருந்தது என்று உறுதிபடக் கூற முடியும்.  அக்காலத்தை சங்ககாலம் என்று கூறுவதற்குப் பதிலாக பண்டைய காலம் என்று கூறுவது பொருத்தமானதாக இருக்கும். (பண்பட்ட இலக்கியங்கள் எழுந்த காலம் ஆதலின்)

அக்கால இலக்கியங்களை பண்டைய இலக்கியங்கள் என்று அழைப்பதே சாலச் சிறந்ததாகும்// 

// இனியும் சங்கம் என்றோ, சங்க காலம் என்றோ, சங்க இலக்கியங்கள் என்றோ அழைப்பது தமிழுக்கு இழுக்காகும்//


//போர்களினாலும் பண்பாட்டுத் தாக்கத்தின் விளைவுகளாலும் தமிழில் வடமொழிச் சொற்கள் கலந்துள்ளனவே அன்றி, வடமொழியிலிருந்து கிளைத்து வளர்ந்த மொழி தமிழன்று// 

Yorumlar

Bu blogdaki popüler yayınlar

Fick parade blond

Joanna Slave Duvalle Innocenthigh Virtual

Slave extra racks